2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு பிணை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

இரண்டு கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட திருகோணமலை மொரவெவப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்ததோடு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குச்சவெளி நீதவான் நீதிமன்ற பதில் நீதபதி ஏ.எம். முஹீத், நேற்று புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.
 
தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேகநபர், மொரவெவயிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் வழியில் வைத்து பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .