Niroshini / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
1,800 மில்லி கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தநபர் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் இன்று (11) விதிக்கப்ட்டது.
கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி சரவணராஜாவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கிண்ணியாவில் இருந்து திருகோணமலைக்குச் செல்லும் வழியில் குறித்த நபரை சோதனை மேற்கொண்ட போதே கஞ்சா கைப்பற்றப்பட்டது எனவும் சந்தேக நபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026