2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு அபராதம்

George   / 2016 மே 30 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

திருகோணமலை ஜயந்திபுர பகுதியில் 800 மில்லிகிராம் அளவில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க, திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.    

ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.   குறித்த சந்தேகநபர்  அவரது வீட்டில் வைத்து கஞ்சாவுடன் வான்எல பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (29) கைதுசெய்யப்பட்டார்.

தொடரந்து, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போதே அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .