Princiya Dixci / 2016 ஜூன் 19 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
சட்ட விரோதமான முறையில் 5,040 மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுவதற்கு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் பெணான்டோ, சற்று முன்னர் உத்தரவிட்டார்.
எனினும், குற்றவாளியை பிணை எடுக்க எவரும் முன்வராததால் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த நபர், கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்கு கஞ்சா கொண்டுசென்ற வேளை, தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த நபரைக் கைது செய்ததாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Mar 2026