Niroshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில், தம் வசம் முந்நூறு மில்லி கிராம் கஞ்சாவை வைத்திருந்த ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
செந்தூர், புடவைக்கட்டு பகுதியைச் சேர்ந்த எஸ்.பிரேம் லொயிட் (வயது 35)என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குச்சவெளி பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்திருந்தபோதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரை சனிக்கிழமை (16) மாலை கைது செய்தனர்.
7 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
26 minute ago