Princiya Dixci / 2016 மே 08 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1,500 மில்லிகிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா, நேற்று சனிக்கிழமை (07) உத்தவிட்டார்.
திருகோணமலை, மகாமாயபுரப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கெதிராக பல வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், திருகோணமலை தலைமையகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (06) இரவு சந்தேகநபரைக் கைதுசெய்த பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
33 minute ago
37 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
37 minute ago
44 minute ago