Princiya Dixci / 2017 ஜனவரி 08 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கும்புறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் 13 கிலோ 550 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு, திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.
இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர், கிளிநொச்சி.கோனாவில் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.
குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, 06ஆம் திகதி மாலை, வவுனியா விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025