Niroshini / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் ஐந்து கஞ்சா கட்டுகளை தம் வசம் வைத்திருந்த ஒருவரை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.
கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கந்தளாயில் நண்பர் ஒருவரிடம் கஞ்சாவை வழங்குவதற்காக பாதையோரத்தில் நின்றிருந்த சமையத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை(27) இரவு கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago