Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை, சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் -09ஆம் வட்டாரத்திலுள்ள செல்வநகர் கிராம காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு கட்டுத் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தோப்பூர் -09ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அலாவுதீன் ஹிஸாம் (வயது 18) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக ஐந்து இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து குறித்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், குறித்த இளைஞர் கட்டுத் துப்பாக்கிக்கு மருந்து இறுக்கிக்கொண்டிருந்தபோது அக்கட்டுத் துப்பாக்கி தற்செயலாக வெடித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஏனைய இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார், கட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026