2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கட்டுத்துவக்குடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமா நகர் பகுதியிலுள்ள வயல் வெளியில் வைத்து கட்டுத்துவக்குடன் 23 வயதுடை இளைஞர் ஒருவரை நேற்று (10)  மாலை கைதுசெய்துள்ளதாகதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் பொலிஸ் வாகனத்தில் வீரமா நகர் பகுதியிலுள்ள வயல் ஓரமாகச் சென்று கொண்டிருந்த போது, துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் தேடுதல் நடத்திய போது, கட்டுத்துவக்கின் மூலமாகக் கொக்குக்கு வெடி வைத்துக் கொண்டிருந்த மேற்படி இளைஞன் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், சம்பூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X