2025 மே 16, வெள்ளிக்கிழமை

கடைமைக்கு இடையூறு; வைத்தியர் முறைப்பாடு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, மஹதிவுல்வெவப் பிரதேச வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபரொருவர் , கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, வைத்தியரொருவர், செவ்வாய்க்கிழமை இரவு,  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக, மொறவெவப் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக நஞ்சறுந்தி விட்டு சிகிச்சைக்காக வந்த பொண்ணொருவரை, வெளியே விடுமாறு, குறித்த நபர் அட்டகாசம் புரிந்துள்ளார்.

வைத்தியரைத் திட்டியமைக்காகவும் கடமைக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .