2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

கடற்படை ட்ரக் மோதியதில் ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜூன் 23 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பியாற்றுப் பகுதியில், திருகோணமலை கடற்படைக்குச் சொந்தமான ட்ரக் வண்டியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த கிண்ணியா மகரூப் நகரைச் சேர்ந்த ஏ.எல்.எம்.ஹுஸைன் (வயது62) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .