2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 06 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லறாவ பகுதியில் 30 கிலோகிராம்; கடலாமை இறைச்சியை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (05) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடலாமை இறைச்சியை விற்பனை செய்வதற்காக இரண்டு பேர் வைத்திருப்பதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பகுதியில் தேடுதல் நடத்தியபோது, கடலாமை இறைச்சியுடன் மேற்படி சந்தேக நபர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

திரியாய், கல்லறாவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையும்; புத்தளம், கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரையுமே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X