2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத்துவக்கு வெடிப்பு; ஒருவர் படுகாயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, திம்பிரிவெவ பகுதியில்  கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.ஆரியசேன  (49 வயது) என்பவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (08) அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், வயல் காவலுக்காக சென்றிருந்த போது, பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்ததாகவும் அதனால் உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X