Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிங்டன் வீதியில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி, இன்று (22) காலை உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற இச்சம்பவத்தில், இரு பிள்ளைகளின் தாயாரான பௌசி தஸ்மியா (வயது 28) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளாரொன, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து காலை 6 மணியளவில் ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்லும் போது, 35 வயதுடைய தனது கணவனால் சரமாரியாகக் கழுத்திலும் வயிற்றிலும் கத்திக்குத்துக்கு இவர் இலக்காகியுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் கணவன் தலைமறைவாகியுள்ளாரெனவும் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரான கணவனுக்கெதிராக வழக்கொன்றும் கந்தளாய் நீதிமன்றில் ஏற்கெனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
தலைமறைவாகியுள்ள கணவனைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கந்தளாய் பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago