Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
கணிதப் பாட ஆசிரியர் ஒருவரை நியமித்துத் தரக் கோரி, கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்னால் சென்று ரி.பி. ஜாயா மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (02) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு மாத காலமாக ஆசிரியர் பற்றாக்குறையால் தமது கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய மாணவர்கள், அதனை நிவர்த்தி செய்து தருமாறு வலயக் கல்வி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற உள்ளதாகவும், சிறந்த ஒரு ஆசிரியரை நியமித்துத் தருமாறும், அவ்வாறு நியமித்துத் தராதபட்சத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஆசிரியர் ஒருவரை நியமித்துத் தராத பட்சத்தில், பொறுப்பு வாய்ந்த உயர் இடங்களுக்குச் சென்று, ஆசிரியரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .