2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கத்திக் குத்தில் ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜூன் 29 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கிண்ணியா, நகர சபை வீதியில், இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார், செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தனர்.

கத்தியால் குத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைத் தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இருவரும்  ஒரே காணிக்குள் குடியிருக்கும் குடும்பஸ்தர்கள் என்றும் இருவரும் ஒரே குடும்பத்தில் உள்ள அக்காவையையும் தங்கையையும் திருமணம் முடித்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காணிப் பிரச்சினை காரணமாகவே இந்தத் தகராறு ஏற்பட்;டுள்ளதுடன், கத்திக்குத்துக்கு இலக்கான நபரின் தலையிலும் வயிற்றிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X