2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்கான வயோதிபர் மரணம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று, இன்று (30) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம்-காரியப்பர் வீதி முஹம்மது ஹனிபா ஹாரிஸ் (60 வயது) எனத் தெரியவருகின்றது.

கல்லடி - மீன்வாடி கடற்கரை பகுதியில், இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, தான் ஒருவரை கொலைசெய்துள்ளதாக,  உடப்பு- தானஞ்சோலை, 05ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயது நபரொருவர், வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சரணடைந்த சந்தேகநபரை, இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான வயோதிபரின் சடலம், தற்பொழுது சம்பவ இடத்திலேயே காணப்படுவதாகவும் மரணம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X