Editorial / 2019 ஜனவரி 02 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, மரத்தடி பகுதியில் 48 வயது நபரொருவரைக் கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 50 வயதுடைய நபரொருவரை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா, இன்று (02) உத்தரவிட்டார்.
குறித்த நபர்கள் இருவரும் யாசகம் செய்பவர்கள் எனவும் மரத்தடி பஸ் தரிப்பிடத்தில் யார் யாசகம் செய்வது என்ற தர்க்கத்தில், இக்கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 31ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், கத்திக்குத்துக்கு இலக்கான நபர், படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago