2025 மே 08, வியாழக்கிழமை

கந்தளாயில் தேர்தல் காரியாலயத்துக்குத் தீ

எப். முபாரக்   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி சார்பில், கந்தளாய் பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் கே.எம்.சுஜான் என்பவரின் தேர்தல் காரியாலயம், இனந்தெரியாதோரால் தீயிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், இன்று  (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பேராறு பிரதேசத்தில், இவ்வாறு தேர்தல் காரியாலயம், இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டமை, இது இரண்டாவது சம்பவமாகும். அண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் காரியாலயம் இவ்வாறு சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X