Princiya Dixci / 2021 ஜனவரி 21 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம் இன்று (21) அறிவித்துள்ளது.
இம்மூவரில் ஒருவர், கல்முனை பிரதேசத்துக்குச் சென்று கந்தளாய் திரும்பியிருந்த நிலையிலே தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் மற்றைய இருவரும் அவரின் தந்தை மற்றும் சகோதரி எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மேற்படி நபர், கந்தளாய் பகுதியிலுள்ள இரு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்பு நடத்தியுள்ளதாகவும் இதனால் வகுப்புக்குச் சென்ற பாடசாலை மாணவர்கள் 200 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் கந்தளாய் பிராந்திய வைத்திய அத்தியட்சகர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
12 minute ago
15 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
26 minute ago
30 minute ago