2025 மே 19, திங்கட்கிழமை

கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து ஆயுதங்கள் சிலவற்றை, இன்று (14) மீட்டுள்ளதாக, உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுப்பகுதியில், மர்மமான பையொன்று கிடப்பதாக, சர்தாபுர விசேட அதிரடிப்படையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பையிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்த விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் மானவடுகே தலைமையிலான குழுவினர், பையை சோதனைக்குட்படுத்தியபோது, இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்துகின்ற 12 ரவைகள் அதனுடைய பீஸ்கள் 12, டொம்பா துப்பாக்கி ரவைகள் 12, கைக்குண்டுகள் 04 , கிளைமோர் குண்டுகள் 03 ஆகியன மீட்கப்பட்டு, உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, சர்தாபுர விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் உப்புவெளி பொலிஸார், குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X