2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி

அப்துல்சலாம் யாசீம்   / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துசிதபுர பகுதியில், கரடி தாக்குதலுக்கு உள்ளான நபரொருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று (28)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாரென, வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள காட்டுப் பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்றபோது,  மரத்துக்குக் கீழே மறைந்திருந்த கரடி தாக்கியதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

தனது ஜீவனோபாயமாக  விறகு வெட்டுதல், தேன் எடுத்தல்  போன்றவற்றை குறித்த நபர் மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு முன்னர் ஏற்கெனவே இப்பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வரை கரடி தாக்கி உள்ளதாகும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .