2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2020 ஜனவரி 26 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை-கோமரங்கடவல சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால்  தெரிவுசெய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவிப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு, கோமரங்கடவல சிங்கள மகா வித்தியாலயதின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கோமரங்கடவல சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி றுதினல் கேணல் எச். கே. டி. டபிள்யூ. வைத்திய திலக  தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

ஹொரன மெட்ரோ சிங்ஹ சமாஜத்தின் ஊடாக, கோமரங்கடவல பிரதேசத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேற்றின் போது தேவையான அனைத்துப் பொருள்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வாறு தங்களது செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் சிறுவர்களுக்கு எவ்வாறான போசாக்கு சத்து உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றியும் வயிற்றில் சிசு உருவானதன் பின்னர் எவ்வாறான விதத்தில்  செயற்படவேண்டும் எனவும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .