2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கலாசார மண்டபம் அமைக்க கோரிக்கை

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

வெருகல் பிரதேச செயலகப் பிரிவில், கலாசார மண்டபமொன்று இல்லையென, இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள 13 கிராமங்களிலும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்  மக்கள் வாழ்கின்றனர்.

இம்மக்கள், கலாசார விழாக்கள், கலை நிகழ்ச்சிகள்,  பொது நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள்  ஆகியவற்றை நடத்துவதற்கு  இங்கு கலாசார மண்டபமொன்று இல்லாமையால், இவர்கள் பாடசாலை மண்டபங்களையும் வேறு இடங்களை நாடவேண்டியுள்ளது.

இதனால் தாம் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், கடந்த காலங்களில் கலாசார மண்டபமொன்று அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் அது தடைப்பட்டதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில், கலாசார மண்டபமொன்றை அமைத்துத்தருமாறு, உரிய பகுதியினரிடம்,  பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .