2025 மே 07, புதன்கிழமை

கல்விமான்கள் கௌரவிப்பு

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட் 

மூதூர் பிரதேசத்தின் பின்தங்கிய கரையோர கிராமங்களான தக்வாநகர், பஹ்ரியா நகர், ஹைரியா நகர் ஆகிய கிராமங்களிலிருந்து, பல்கலை கழகம் ,கல்வியியல் கல்லூரி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும், இதுவரையில் பட்டம் பெற்ற பட்டதாரிகளையும், உலமாக்களையும் பாராட்டி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (25), மூதூர் அல்மனார் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதனை மூதூர் ஈராக் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. 

விழாவில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், விசேட அதிதிகளாக மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எம்.ஏ.அறூஸ், எம்.ஐ.வஹ்ஜீத் மற்றும் மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.ஹரீம் மௌலவி  உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர். மேற்படி நிக​ழ்வில் ​5 பேர் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X