2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளால் தென்னை மரங்கள் துவம்சம்

Princiya Dixci   / 2022 மே 26 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாம் குளம் கிராமத்துக்குள் இன்று (26) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், சுமார் 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், சிறு குடிசைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் என்பனவற்றை துவம்சம் செய்துள்ளன.

இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், விறகு எடுத்தல் மற்றும் பயிர் செய்தல் முதலான தொழில்களை இவர்கள் செய்து வருகின்றனர்.

அதிகாலை வேலை இரண்டுக்கும் மேற்பட்ட யானைகள் கிராமத்துக்குள் புகுந்து இவ்வாறு அட்டகாசம் செய்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இதனால் நான்கு வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த காய்க்கக் கூடிய நிலையிருந்த தென்னை மரங்கள் வேரோடும், குருத்தோடும் பிடுங்கி அழிக்கப்பட்டுள்ளன.

இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அங்கலாய்க்கும் அதேவேளை, ஏற்கெனவே யானைப் பாதுகாப்பு வேலி போடப்பட்டும் பயன் இல்லையெனவும் கவலை தெரிவித்தனர்.

எனவே, காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து தம்மையும் தமது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க  துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .