தீஷான் அஹமட் / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், இக்பால் நகர் கிராமத்துக்குள், இன்று (05) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தால், பயிர்களும் சுற்றுவேலிகளும் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.
நான்கு வீடுக் காணிகளில் வைக்கப்பட்டிருந்த 32 தென்னை மரங்கள், வாழை மரங்கள், சுற்று வேலிகளையே, இவ்வாறு காட்டு யானைகள் துவம்சம் செய்துள்ளன.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து கஷ்டப்பட்டு தாங்கள் பயிர்களைச் செய்து வரும் நிலையில், காட்டு யானைகள் இவ்வாறு நட்டங்களை ஏற்படுத்தி வருவதால் தாம் பொருளாதார அடிப்படையிலும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இக்பால் நகர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு, இம்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago