Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.கீத்
திருகோணமலை மாவட்டத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் சங்கத்தினர், திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்குக்கு முன்னால், இன்று (03) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மேற்படி சங்கத்தின் தலைவி திருமதி ஆஷா தலைமையில், "எம் பிள்ளைகள் எமக்கு வேண்டும்” என்ற தொனிப்பொருளில், அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்”, “நாமும் இலங்கை மக்கள்தான், எமக்கும் சுதத்திரம் வேண்டும்”, “எமக்கு சரியான நீதி வேண்டும்”, “எமது பிள்ளைகளை விடுதலை செய்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டு சுழற்சி முறைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுப் தவிர்ப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக 1,071 நாளாக இன்றும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்திலாவது தமக்கான நல்ல தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டுமென, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .