2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காணிகளை மீட்டுத்தருமாறு நிலாவெளியில் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 21 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, நிலாவெளி 8ஆம் கட்டையைச் சேர்ந்த ரசூல் தோட்டம் எனப்படும் சுமார் 61 ஏக்கர் காணி இதுவரை காலம் மக்கள் பாவனைக்கு உட்பட்டிருந்த நிலையில், தற்போது அக்காணி, சுற்றுலா துறைக்குரிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நிர்க்கதியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தமக்கான காணியை மீட்டுத் தருமாறு கோரி, நிலாவெளி பிரதான வீதியில் இன்று (21) அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதுவரை காலம் வாழ்ந்து வந்த தமக்கு எவ்வித மாற்று வசதிகளோ நட்டஈடோ வழங்கப்படாத நிலையில், அரசியல்வாதிகளோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தமக்கு உரிய தகுந்த முடிவுகளைத் தரவில்லை எனவும் அம்மக்கள் தெரிவித்தனர்.  

2015இல் அரசுடைமையாக்கப்பட்டு, சுற்றுலாத் துறைக்கு கையகப்படுத்தியதாகவும் மக்கள் தெரிவித்தனர். 

பரம்பரை பரம்பரையாக பூர்வீகக் காணிகளை இவ்வாறு அரசுடைமையாக்கம் செய்வது தங்களுக்கு கவலையளிப்பதாகவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X