2025 மே 01, வியாழக்கிழமை

காணித்தகராறு காரணமாக வெட்டுக்குத்து

Freelancer   / 2023 மார்ச் 12 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணித்தகராறு காரணமாக வெட்டுக்குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 34,மற்றும் 48 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலத்த வெட்டுக் காயங்களுக்குள்ளான 28 வயதுடைய ஒருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கான காணித்தகராறு காரணமாக மது போதையில் சென்று மற்றொருவரை  வளால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதோடு, 
சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .