2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், எப்.முபாரக்

கிண்ணியா பொலிஸ் பிரிவு, புவரசந் தீவுப் பகுதியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள சம்பவத்தில், கிண்ணியா புவரசந் தீவு திருகோணமலை யூசுப் வித்தியாலயத்தில் தரம் 02 இல் கல்வி பயிலும், நிஜாம் - அஸ்னி (வயது 07) என்ற சிறுவனே உயிழந்தவராவர்.

சடலம், கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், பிரேர பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X