2025 மே 01, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக மண்டபத்தில், பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில், இன்று (27) நடைபெற்றது.

கிண்ணியா, மயிலப்பான்சேனை பகுதிகளில் காட்டு யானை தடுப்பு வேலிகளை அமைத்தல், அங்குள்ள பற்றைக்காடுகளைச் சுத்தம் செய்து, மின்விளக்குகளைப் பொருத்தல், நீண்டகாலமாக நிலவி வரும் மேய்ச்சல் நிலப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்ற கிராமத்தில் வீட்டுத் திட்டம் அமைக்க நடவடிக்கைகள் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும்  பிரதியமைச்சருமான  அப்துல்லா மஃறூப் இதன்போது முன்வைத்தார்.

இதில் கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.சைபுதீன் உட்பட அரச அதிகாரிகள், முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .