2025 மே 07, புதன்கிழமை

கிண்ணியாவில் விபத்து; குழந்தை பலி

Editorial   / 2018 பெப்ரவரி 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

கிண்ணியா பிரதேச சபைக்கு முன்னால் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் (15) இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று ஸ்தலத்தில் பலியானதுடன், இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

முள்ளிப்பொத்தானை 99ஆம் கட்டையில் இருந்து  காத்தான்குடிக்கு செல்லும் வழியில் கிண்ணியா பிரதேச சபைக்கு முன்பாக   நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வான்  ஒன்று மோதியுள்ளது.

இதன்போது, ஒன்றரை வயதுக் குழந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அக்குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இதில், தாய், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X