Editorial / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்
ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கிராம சக்தி வேலைத்திடம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்தன, திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம். உதயக்குமார், அம்பாறை மாவட்ட செயலாளர் பண்டாரநாயக்க, அமைச்சுகளின் செயலாளர், திணைக்களத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்பட்ட கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன்.
மேலும், 2018 ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்தின் மூலம் செய்து முடிக்கப்பட்ட வேலைகள் தொடர்பாகவும் இன்னும் நிறைவடையாத வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டன.
3 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
31 minute ago
54 minute ago
2 hours ago