Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருகாபுரி கிராம சேவை பெண் அதிகாரி தாக்கப்பட்டமையைக் கண்டித்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலத்துக்கு முன்பாக, இன்று (19) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் அமையம், சமூகச் செயற்பாட்டாளர்கள், இராவணசேனை போன்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
“கிராம அதிகாரியைத் தாக்கியவர்களைக் கைது செய்”, “பெண்கள் நாட்டின் கண்கள்”, “நீதியை நிலைநாட்டு” போன்ற சுலோகங்களை, இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இதேவேளை, சம்பவம் தொடரபாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், “கடந்த 31.08.2018 அன்று, முரகாபுரி கிராம சேவகர் ஜமாலியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அரசியல்வாதி ஒருவரும் சில குண்டர்களும் அத்துமீறி அலுவலகத்தினுள் நுழைந்து, பெண் அதிகாரியைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தடிகள், பொல்லுகளால் தாக்கியும் கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளங் காட்டப்பட்ட போதும், ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு, அவரும் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரென, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
இச்செயல், சட்டத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்வதாகவும், எனவே, உரிய நீதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரியும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும், அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
13 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
1 hours ago
2 hours ago