Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கிளினிக்கில் பதிவு செய்து மாதாந்தம் தொடர்ந்து மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலையுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பின்வரும் தகவல்களை வழங்குவதன் மூலம் உங்களது மருந்துகளை உங்களது வீட்டுக்கே கொண்டு வந்து தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.
நோயாளர்கள் பதிவு செய்ய வேண்டிய தகவல்களாக
1. முழுப்பெயர்
2. வயது
3. பால்
4. கிளினிக் இலக்கம் (தங்கள் கிளினிக் கொப்பியில் எழுதப்பட்டிருக்கும்)
5. தொலைபேசி இலக்கம் மற்றும் அடையாள அட்டை இலக்கம்
6. தபால் முகவரி போன்ற விடயங்களை வழங்குமாறும்
வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கம் தெரியாவிடின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
0718261265
0718049169
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இரத்தம் மாற்றப்பட்டு வரும் நோயாளர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று அவ்வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களது இரத்த மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago