Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 30 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று (29) தெரிவித்தார்.
தொல்லியல் துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயற்பட்டால், நாட்டின் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
தொப்பிகல, நரகமுல்ல வனப் பகுதியில் தொல்லியல் பெறுமதிகள் தொடர்பில் மாகாண சபையின் விதிகளின் கீழ் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை, கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் சமர்ப்பித்து உரையாற்றும் போதே, ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
தொப்பிகல வனப் பகுதியில் உள்ள நரகமுல்ல, குடும்பிகல சூலக்காடு, அக்கராயன்குளம், வசிபெந்தகல மற்றும் முருதத்தனி உள்ளிட்ட ஒன்பது தொல்பொருள் இடங்கள் இந்த அறிக்கையின்படி ஆராயப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த தொல்பொருள் இடங்களை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டது.
அதனை மேலும் விரைவுபடுத்தும் வகையில், கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கும் கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்துகொள்ளவும் இந்தச் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, இம்மாத இறுதிக்குள் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன்மொழியப்பட்டது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், “கடந்த இரண்டு வருடங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தொல்பொருள் இடங்களை நான் பார்வையிட்டுள்ளேன். ஒரு விடயத்தை புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது, இந்த இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட வேண்டும். அதன் மூலம், சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும்'' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago