2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு ஆளுநர் - அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் சந்திப்பு

Editorial   / 2017 நவம்பர் 30 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் இலங்கைக்கான  அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகர் ப்ரைஸி ஹட்ஸிசெனுக்கும் இடையிலான  சந்திப்பொன்று,  திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (29) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய நிதியுதவியுடன், கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  சுற்றுலா, உள்ளூராட்சி அபிவிருத்தி, சிறு கைத்தொழில் துறை தொடர்பான  அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் யுத்தத்துக்குப் பின்னரான கிழக்கு மாகாண சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் தொடர்பாக, இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டன.

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு, அவுஸ்திரேலியா வழங்கும் பங்களிப்புக்கு நன்றியைத் தெரிவித்த ஆளுநர், மாகாணத்தின் கல்வி, மருத்துவம், மனித வள மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலியா  அரசாங்கம்  ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X