2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் பலா மரம் நாட்டும் ஆரம்ப விழா

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் பலா மரக்கன்றுகளைப் பரவலாக நடுகை செய்து, மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான பலா மரம் நாட்டும் நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் இன்று (29) ஆரம்பிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் அதிபர் காரியாலயமும் நெத் எப்.எம் ஊடக வலையமைப்பும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

வரட்சி ,வௌ்ளம் போன்ற காலநிலை மாற்றங்களால் கிழக்கு மாகாணத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும்  எமது நாட்டுக்குத் தேவையான சகல உணவு பொருட்களையும்  இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கைக்கு அமைவாகவே, இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டிலின்  கீழ், கிழக்கு மாகாண உணவு உற்பத்தியை அதிகரித்து, இலங்கையின் தானிய களஞ்சியமாக மாறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை கிழக்கு மாகாணம் மேற்கொண்டுள்ளது.

மாதாந்தம் 10,000 பலா மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, பாடசாலை, பொது இடங்கள், தனியார் வீடுகளில் நாட்டுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  ஆளுநர் தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கும் முற்படையினருக்கும், திணைக்கள அதிகாரிகளுக்கும் பலா மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்  ஆர்.எம்.நிமால் பெரேரா, திருகோணமலை மாவட்டச் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார,  கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் இராஜசேகரம் ஞானசேகரம் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .