2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

‘கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளது’

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஏனைய மாகாணங்களை விடவும் கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற தொழில் முயற்சியாளர்கள், அரச உயரதிகாரிகள் பங்கு பற்றிய, சிறிய நடுத்தர அபிவிருத்திச் செயற்றிட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்றவற்றிலும் ஏனைய மாகாணங்களை விட கிழக்கு மாகாணம் பின்தங்கியுள்ளதாகவும் இதனை உயர்த்த, தொழில் முயற்சியாண்மையாளர்கள் முன்வரவேண்டுமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையின் வறுமை நிலை 4.01 சதவீதமாகக் காணப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்தின் வறுமை நிலை 7.03 சதவீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X