2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

குகதாசனுடன் மக்களை சந்தித்த ஜனாதிபதி

Editorial   / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ . அச்சுதன்

திருகோணமலை மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த சந்திப்பு திருகோணமலை நகராட்சி மன்ற பிரதான மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை மதியம் (04) இடம் பெற்றது.

இதன் போது வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம்,  மக்களுடைய காணிகள் விடுவிப்பு,  மக்கெய்சர் விளையாட்டு அரங்கு தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன் இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,  திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X