Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும், பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (12) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூபின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகள், உரியவாறு உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு, பிரதியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
காலதாமதமின்றி செயற்றிட்டங்களைப் பயனுள்ள வகையில் முன்னெடுக்குமாறும் அபிவிருத்திக்குத் தடைகளாக இருக்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
நீர்ப்பாசன நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வும் மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபரால் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.
47 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago