Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
பல வருடங்களாக மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் எதிர்நோக்கிவருகின்ற குடிநீர் பிரச்சினையின் உண்மைத் தணமையை அடையாளம் கண்டு அதற்குறிய நிரந்தரத் தீர்வைப்பெற்றுக்கொள்வதற்காக ( நீலாப்பொல நீரேற்றும் நிலையத்திற்கு (Intake Pumping Station) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விஜயம் செய்து அப்பகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
நீரேற்றும் இடத்திற்கு மகாவெளி நீர் வருவதில்லை. தற்பொழுது நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீரேற்றும் இடத்திற்கு நீரைக் கொண்டுவருகிறார்கள். நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு ஏதாவது கோளாறு ஏற்படுமாக இருந்தால் நீர்விநியோகம் தடைப்படும் என்பதை எடுத்துரைத்தனர்.
குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எதிர்வரும் வாரங்களில் அதற்கான திட்டவரைவொன்றினை கிழக்கு மாகாண பிரதிப் பொதுமுகாமையாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களில் அனுமதியைப்பெற்று நிரந்தரத்தீர்வைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
31 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
59 minute ago