2025 மே 13, செவ்வாய்க்கிழமை

குடியிருப்பு காணிக்குள் புகுந்த முதலை மீட்பு

தீஷான் அஹமட்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூரில் குடியிருப்புக் காணியொன்றுக்குள் புகுந்த சுமார் 8 அடி நீளமான முதலையொன்று, கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காணியின் வீட்டு உரிமையாளர், வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்த போது, கிணற்று ஒரமாக முதலையொன்று நிற்பதைக் கண்டு கூக்கிரலிட்டு, அயலவர்களை அழைத்த போது, முதலை ஓடுவதற்கு முனைந்துள்ளது.

எனினும், வீட்டின் முன்னால் உள்ள வடிகாணுக்குல் ஓடமுடியாதவாறு வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் முதலையை பாதுகாப்பாக மீட்டெடுத்துச் சென்றுள்ளனரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X