2026 மார்ச் 18, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு அறுவர் இலக்கு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 14 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, நாமல்வத்தை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 6 பேர் இன்று (14)  காலை 11 மணியளவில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 6 பேரும் கிண்ணியா பகுதியிலிருந்து தமது உறவினர்களின் வீட்டுக்கு வருகைதந்திருந்த போது, வீட்டுக்குப் பின்னாலுள்ள காட்டுப் பகுதிக்குள் பார்வையிடுவதற்காகச் சென்றுள்ளனர்.

இதன்போது மரமொன்றில் மறைந்திருந்த குளவிக்கூடு கலைந்து, மேற்படி 6 பேரையும் குத்தியதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில், கிண்ணியா, பைசல் நகர் பகுதியைச் சேர்ந்த தாய், தந்தை  13, 16 வயதுப் பிள்ளைகள் உட்பட 20, 28 வயது உறவினர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.

குளவி கொட்டுக்கு இலக்கான ஆறு பேரும், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் முன்னர் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X