2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

குழந்தைகளுக்கான பால்மா பொதிகள் வழங்கிவைப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கான பால்மா பொதிகள் வழங்கும்  நிகழ்வு, பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதியின் தலைமையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (29) நடைபெற்றது.

இதற்காக 2 தொடக்கம் 5 வரையான வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட 100  குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இதில் முதற்கட்டமாக  50 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான பால்மா பொதிகள் வழங்கப்பட்டன.

இப்பொதிகளை, சர்வதேச தொன்டு நிறுவனத்தின் இலங்கைக்கான குளோபல் இஹ்சான் ரிலீப் நிறுவனம் வழங்கியிருந்தது. அந்நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் முகம்மது ஜறூக் கலந்துகொண்டு இப்பொதிகளை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.பிரசாந்தன்,  உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிராம நிர்வாக உத்தியோகத்தர் என்.ஜெயகாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X