Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 13 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - மொறவெவ பிரதேச மக்களுக்கு கூப்பன் மூலம் பெட்ரோல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று ( 12) முதல் நாளை 14ஆம் திகதி வரை ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மற்றும் கார்களை பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன உரிம பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி போன்றவற்றை எடுத்துக் கொண்டு வருமாறும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபாவுக்கும், மூன்று சக்கர வாகனங்களுக்கு 2500 ரூபாவுக்கும் மற்றும் கார்களுக்கு 5000 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் மொரவெவ பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட அறிவிப்பை தொடர்ந்து எரிபொருள் கூப்பனை பெற்று கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றார்கள்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago