Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா - சூரங்கள் பகுதியில், வீட்டொன்றின் கூரையைப் பிரித்து நுழைந்து, 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 53 வயது நருக்கு, 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்தார்.
சூரங்கள் பகுதியில், 2012ஆம் ஆண்டில், வீடொன்றின் கூரையைப் பிறித்து நுழைந்த குறித்த நபர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமிக்கு 13 வயதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, குறித்த சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையப் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், குறித்த நபருக்கு எதிராக குற்றப் பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முன்னெடுக்கப்ட்டன.
குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கடந்த சில வழக்கு தவளைகளுக்கு தொடர்ச்சியாக சமூகமளிக்காமையால், எதிரி இன்றி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இன்றைய தினமும் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்காதமையால் அவருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், குறித்த குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,200,000 ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் மேலதிகமாக 3 வருட கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், அரச செலவாக 3 குற்றச்சாட்டுக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் 75,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 18 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
14 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
2 hours ago