Editorial / 2018 மார்ச் 17 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ் ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை தலைமையாகப் பொலிஸ் பிரிவில் கோட்டை வீதி சமூத்திர கம பகுதியில் வைத்து கேரள கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை கோட்டை வீதி சமூத்திரகம பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய குறித்த நபரிடமிருந்து 480 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையின் போது, இவர் கைது செய்யப்பட்டார்.
இவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பொலிஸார் தலைமையாகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை தலைமையாக பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
33 minute ago
1 hours ago